13/05/2018

மகுடேசுவரன்

என் உறுதிப்பாடு உடைந்து
உன் நினைவில்
அழுந்தித் தவித்தேன்.

உன் அனுமதியின்றி
உன் அறிதலின்றி
உன்னை நினைத்துவிட்டேன்.

சுவர் தாண்டிக் குதித்து
உன் தோட்டக் கனிபறித்து
உண்டதைப் போன்ற
அத்துமீறல் இது.

பிடித்து
அடிமரத்தில் கட்டி
அடித்துதை.

வீங்கிக் கிழிந்து
தாடை தாழ்ந்து
ரத்த நூல் ஒழுகும் என் முகம் காணும் நீ
அக்கணம் ஒரு துகளளவு
இரங்குவாயன்றோ !

-மகுடேசுவரன்