நீ உன் அன்பின் சொல்லை விட்டு சென்று நீண்ட நேரம் ஆகிறது..
நான் அந்த சொல்லின் அருகிலேயே அமர்ந்து இருக்கிறேன்..
நீ ஒரு சிறிய காதல் முத்தத்திற்கு பிறகு எங்கோ நெடுந்தொலைவு சென்று விட்டாய்..
நான் அந்த முத்தத்தை நிலவொளி ஆக்கி மரங்களை ஒளிரச் செய்கிறேன்..
அன்பின் தருணங்கள் பனிக்கட்டியால் ஆனது அது உருகும்போது அதோடு சேர்ந்து நானும் உருக முடியாமல் மிகவும் தனிமை அடைகிறேன்...
நீ நேற்று என்னிடம் எவ்வளவு அன்பாக இருந்தாய் என உன்னிடம் ஒரு வரலாற்று ஆவணத்தை நீட்டும் போது எனக்கு அவ்வளவு கூச்சமாக இருக்கிறது..
மனுஷ்யபுத்திரன்..