04/03/2020

அ.வெண்ணிலா

உள்ளே வீசப்படும்
செய்தித்தாளை
அப்பாவிடம் கொடுக்கவும்
கீரை விற்பவன் வந்தால்
அம்மாவைக் கூப்பிடவும்
கற்றுக் கொள்கிறது குழந்தை
யாரும் கற்றுத் தராமலேயே

-அ.வெண்ணிலா