13/03/2020

சூரிய குமார்

பெண் குழந்தை
பிறந்திருக்கிறதென
சந்தோஷமாக இனிப்பு
வழங்குகிறார்கள்
பெண் குழந்தையை
பெற்றவர்கள்..

சரி பரவாயில்லை
பெண் குழந்தைதான்
நல்லது என
ஆறுதல் சொல்கிறார்கள்
இனிப்பு எடுத்துக்கொள்பவர்கள்

-சூரியகுமார்