27/03/2020

தன்மோகம்

#தன்மோகம்...

தன்மோகம் என்பது அதீதத் தற்பெருமை, அகங்காரம், தன்னைப் பற்றி வானளாவ உயர்வான எண்ணம், மற்றவர்களைத் துச்சமாக மதிக்கும் போக்கு, பச்சாதாபம் அற்ற நிலை, தன்னை முதன்மைப்படுத்தும் சுயநலம், தன் நலத்துக்காகப் பிறரைப் பயன்படுத்தும் பண்பு போன்ற ஆளுமைக் கூறுகளை உள்ளடக்கியது.

தற்பெருமைகளைப் பறை சாற்றுவதும், உயர்பதவியில் உள்ள அதிகாரிகளின் மீது அதிகாரம் செலுத்துவதில் இன்பம் காண்பதும், மற்றவர்களை ஆட்டிப்படைப்பதும் இவர்களுக்குக் கைவந்த கலை. இதேபோல, துதி பாடும் கூட்டம் ஒன்றைத் தன்னைச் சுற்றி வைத்துக்கொள்வது, ‘ஆமாம் சாமி' போடும் நபர்களுக்குப் பதவிகள் அளிப்பது (கூழைக் கும்பிடு போடும் அவர்கள் தம் வன்மத்தைப் பிறர் மீது காட்டுவார்கள். சில வேளைகளில் சாது மிரள்வதும்கூட நடக்கும்!) - இவை எல்லாம் நாம் கண்ட, கண்டு வரும் தன்மோக ஆளுமையின் வெளிப்பாடுகள்.